ஏ 35 பிரதான வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக இன்று (18.11.2024) பரந்தன் பகுதியில் இருந்து புது குடியிருப்பு பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் விசுவமடு பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் குறுக்கே திரும்ப முற்பட்ட வேலை பரந்தன் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here