பாதுக்க, மஹிங்கல பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன், கெப் மற்றும் முச்சக்கர வண்டி என 3 வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணை நகரசபை தீயணைப்பு பிரிவினர் வந்து தீயை அணைக்க முயற்சித்ததாகவும், அதற்குள் மூன்று வாகனங்களும் தீயில் எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏலத்தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள பெரிய காணியில் உள்ள இந்த காணிக்குள் யாரும் நுழைய முடியாது எனவும், இந்த வாகனங்களுக்கு யாராவது தீ வைத்தாரா அல்லது ஒரு வாகனம் தீப்பிடித்த பின் மற்ற வாகனங்களும் தீப்பிடித்ததா என்பது இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here