“ஜனவரமே புரவசியோ” அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி ஒன்று தற்போது ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு எதிரான சதிகளை முறியடிப்போம் என்ற தொனிப்பொருளில் அவர்கள் இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.
முதலில் கொழும்பு கோட்டையில் ஒன்றுகூடிய அந்த அமைப்பினர், அங்கிருந்து காலிமுகத்திடல் வரை பேரணியாக தற்போது சென்று கொண்டிருக்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.







