நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் அப்புத்தளை நகரில் ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் குறித்த இரண்டு வீடுகளுக்கும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது கற்கள் உருண்டு விழுந்ததால் சேதம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here