முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, திலீப் ஜயவீர தலைமையிலான ‘தாய்நாடு மக்கள் கட்சியின்’ தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம்(27) அவருக்கான நியமனக் கடிதத்தை அந்த கட்சியின் தலைவர் திலீப் ஜயவீர கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து கையளித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அந்த கட்சியின் தலைவர், தமது கட்சி முக்கியமான திருப்புமுனையை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








