கொழும்பு துறைமுக நகரில் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில், சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் இலங்கைக் கிளை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான முக்கிய முதலீட்டு மத்திய நிலையமாக கொழும்பு துறைமுக நகரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் இலங்கைக் கிளை துறைமுக நகரத் திட்டத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதாக, சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை தலைவர் ஷனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.








