தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உற்பத்தித்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகையாக 350 ரூபா வழங்கப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,700 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுகள் தொடர்பிலான ஆட்சேபனைகள் மற்றும் ஆட்சேபனைக்கான காரணங்களின் அறிக்கையுடன் எதிர்வரும் 28ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் தமக்கு அனுப்பி வைக்குமாறும் சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here