நடிகை கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் கோல்டன் ஆடையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருகின்றார்.
அதுமட்டுமன்றி மகாநடி படத்திற்கான தேசிய விருதை பெற்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக மாறி வந்தார்.
தற்போது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதுடன், இவரது நடிப்பில் ரகு தாத்தா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.














