தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார். அதன் பின், தமிழில் கார்கி, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.

தற்போது இவர், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனுக்கு அவருடைய காதலர் வினீத்துடன் திருமணம் நிச்சயமானது.

அதை தொடர்ந்து, இன்று கோத்தகிரியில் படுகர் இன முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்தை சாய் பல்லவி முன்னிருந்து நடத்தி வைத்துள்ளார். தற்போது, இந்த அழகிய திருமண புகைப்படங்கள், வீடியோக்கள்  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here