வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரையின் பேரில் சிராந்தி ராஜபக்ச இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான சேனக பல்லேதென்ன தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 7ஆம் திகதி அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, வைத்திய சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.








