நாட்டின் 16 மாவட்டங்களில் இன்று (08) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சபரகமுவ மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








