இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக ஊழியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்துக்கு அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை என்று சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் முதல் கட்டம் இந்த மாதம் 15ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், ஆனால் இதுவரை அரசாங்கத்திடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்பார்த்தபடி தீர்வு கிடைக்காத பட்சத்தில், சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் வேலைநிறுத்தமாக தீவிரப்படுத்தப்படும் என மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்தா எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here