வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று வெப்பமான காலநிலையே காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், போதுமான அளவு நீரை பருகவும், வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெள்ளை அல்லது வெளிர் நிற ஒளி ஆடைகளை அணியுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here