நாட்டில் தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக நாடு முழுவதும் 30,000க்கும் அதிகமான நிலச்சரிவு ஆபத்துள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் வலியுறுத்தியதாவது, இம்மாதம் 3ஆம் திகதி முதல் இன்று வரை 25 நிலச்சரிவு முன் எச்சரிக்கை புதுப்பிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதேபோல் முன்னர் ஏற்பட்ட தித்வா தாக்கம் காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவுகளின் ஆரம்ப அறிகுறிகள் தோன்றியுள்ளதாகவும் கூறினார்.

சில இடங்களில் கற்கள் மற்றும் மண் அடுக்குகள் தற்காலிகமாக தங்கியுள்ளதுடன், தற்போதைய மழையுடன் அவை அடித்துச் செல்லப்படும் கடும் ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதேசத்திற்கு சிறு மழை பெய்தாலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையுடன் அறிவிப்பு செல்லுபடியாகும் என்றும் அவர் கூறினார்.

எனவே ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று (21) பெய்த மழையுடன் நிலச்சரிவு அறிவிப்புகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், பின்வரும் பகுதிகளுக்கு (நிலை 2) அவதானமாக இருப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டம்: உடபலாத்த, மெதும்பர, குண்டசாலை

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வூட்,

இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, எலபாத்த, குருவிட்ட

இதற்கிடையில் தற்போதைய மழையுடன் இந்த அறிவிப்புகள் மாறக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here