தற்போது விளக்கமறியலில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதராகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
அதற்கமைய, வழக்கு விசாரணைகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.








