இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (22) அபாயகரமான வெப்பம் நிலவும் எனவும் நீண்ட நேரம் பொது வெளியில் இருப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் இவ்வாறு வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைவாக நாட்டின் சில பகுதிகளில், மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு, ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொது வெளியில் தொடர்ந்து உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்வதால் சோர்வு வலிமிகுந்த வெப்பத் தசைப்பிடிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here