கொழும்பு மற்றும் ஏனைய மக்கள் கூடும் பகுதிகளில் நபர் ஒருவரால்
தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்படுவதாக சமூக ஊடகங்களிலும் சில இணையதளங்களிலும் பரவி வரும் விடயத்தை இலங்கை காவல்துறை நிராகரித்துள்ளது.

குறித்த தகவல்கள் “முற்றிலும் பொய்யானவை” என்றும், அத்தகைய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதாளக்குழு தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஜா-எல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அத்தகைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ள உதவி காவல் அத்தியட்சகர் வூட்லர், குறித்த நபர் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படும் விடயத்தை மறுத்துள்ளார்.

மேலும், சந்தேக நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here