கிங் கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன மாணவனின் சடலம் இன்று (06.09) பிற்பகல் மீட்கப்பட்டதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெலுவ கடஹிங்கல பகுதியைச் சேர்ந்த ஜனிது சுரேந்திரா 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹப்பிட்டிய, எஹலபிட்டிய பிரதேசத்தில் மூன்று நண்பர்களுடன் ஜின் கங்கையில் நீராடச் சென்று காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மாணவனைத் தேடி காலி கடற்படைத் தளத்திற்கு வந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here