சீரற்ற காலநிலை காரணமாக கலடுவாவ வலைய சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக குழாயின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இதன்படி, காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என அச்சபை  தெரிவித்துள்ளது.

அதன்படி, பாதுக்கை, கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, மஹரகம, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, பொரலஸ்கமுவ, பெபிலியான, கலகெதர ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here