Wednesday, June 10, 2026
No menu items!

சீரற்ற காலநிலை

சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்

இலங்கைக்கு வடகிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்ருப்பதன் காரணமாக, இலங்கை முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த இரண்டு நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டல நிலை அடுத்த 48 மணி நேரத்திற்குள்...

சீரற்ற காலநிலை; ஒருவர் உயிரிழப்பு, 62 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டம், கோரளைப்பற்று தெற்கில் இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இரத்தினபுர, காலி, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த...

வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை- 6பேர் உயிரிழப்பு!

வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பேருந்து மீது கற்பாறைகள் வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  32 பயணிகளுடன் சென்ற குறித்த பேருந்து மீது பாறைகள் வீழ்ந்ததால் பேருந்தின் முன்பகுதி நசுங்கியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை...

மண்சரிவு அபாயம்: 5 மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கொழும்பு, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பல பகுதிகளில் 24 மணித்தியாலங்களுக்குள் மின் விநியோகம் வழமைக்கு..!

சீரற்ற காலநிலை காரணமாக நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையான காலப்பகுதியில் மின்தடை தொடர்பான 55,940 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அவற்றில் 17,460 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்துள்ளார். ஏனைய பகுதிகளில் 24 மணித்தியாலங்களுக்குள் மின்...

சீரற்ற காலநிலை – அவசர நிலை குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். எந்தவொரு அவசரநிலைக்கும் பதிலளிக்க அனைத்து திணைக்களமும் தயாராக இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், எந்தவொரு பகுதியிலும்...

தேங்காய் விலை படிப்படியாக குறைவு..!

சந்தையில் கடந்த வாரத்தை விட தேங்காய் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபா முதல் 220 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தேங்காய் விலை குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது...

நெற்செய்கை அழிவு தொடர்பில் அரசாங்க அதிபரின் அறிவிப்பு..!

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் தற்பொழுது ஏற்பட்டுள்ள விவசாயிகளின் பயிரழிவு தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த பெரும்போகத்தில் அண்ணளவாக எழுபது ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த வருட இறுதி மற்றும் இவ்வருட ஆரம்பத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் நெற்செய்கை அழிவு நிலைக்கு...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி ஆளுநருக்கு கடிதம்..!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குமாறு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவிற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தாங்கள் இம் மாகாணத்தின் வலுவாக்கத்திற்காகவும் இன...

சீரற்ற காலநிலை காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு..!

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 320 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், நாட்டில் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 48 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img