நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியின் புரூக்சைட் பகுதியில் இன்று (20) காலை பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

ராகலை பொலிஸ் பிரிவின் தகவலின்படி, ராகலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், நுவரெலியா நோக்கி வந்த லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறி, அதே திசையில் சென்ற மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்திசையில் வந்த தனியார் பேருந்துடன் மோதியது.

இதில் லொறி சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்தில் லொறியும் தனியார் பேருந்தும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here