எஸ்டோனியா வான்வெளியில் ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, எஸ்டோனியா நேட்டோ உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனையை கோரியுள்ளது.

பின்லாந்து வளைகுடா மேல், ரஷ்யாவின் மிக்-31 போர் விமானங்கள் 3, எஸ்டோனியா வான்வெளியில் 12 நிமிடங்கள் அனுமதியின்றி பறந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நேட்டோவின் கிழக்கு பாதுகாப்பு பணியின் கீழ், இத்தாலி, பின்லாந்து, ஸ்வீடன் போர் விமானங்கள் உடனடியாக புறப்பட்டு, ரஷ்ய விமானங்களை துரத்தியதாக கூறப்பட்டுள்ளது.

“இது ரஷ்யாவின் பொறுப்பற்ற நடத்தை; அதேசமயம் நேட்டோவின் பதிலளிக்கும் திறனையும் காட்டுகிறது” என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எஸ்டோனியா குற்றச்சாட்டை ரஷ்யா முழுமையாக மறுத்துள்ளது.

இதற்கு முன்னர் போலந்து, ருமேனியா ஆகிய நேட்டோ நாடுகளும், ரஷ்ய ட்ரோன்கள் தங்கள் வான்வெளியை மீறியதாக புகார் செய்திருந்தன.

ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியில் ரஷ்யா–நேட்டோ மோதல் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here