ஈராக் தலைநகரில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கு ஈரான்சார்பு ஆயுதகுழுவின் தளபதி கட்டாப் ஹெஸ்புல்லா என்பவரும்   அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் இலக்காகியுள்ளது.

பக்தாத் தலைநகரிலிருந்து கிழக்கே உள்ள பகுதியொன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் பல வெடிப்புச்சத்தங்கள் கேட்டுள்ளன .  இத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் .

ஜோர்தானில் அமெரிக்க தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கும் இந்த குழுவிற்கும் தொடர்புள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

சனசந்தடி நிறைந்த வீதியில் கார் துல்லியமாக தாக்கப்பட்டது இதனால் கார் முற்றாக எரியுண்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிய அழிவோ பொதுமக்களிற்கு உயிரிழப்போ ஏற்படவில்லை என அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம்தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here