ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் பரந்தன் பகுதியில் இன்று28.08.2024 திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் கிளிநொச்சி தொகுதியின் பிரதான அமைப்பாளர் ம.மரியசீலன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வடமாகாண பிரதான அமைப்பாளர் உமாச்சந்திரா பிரகாஸ் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார் .

குறித்த நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்பு வடமாகாணத்தின் மக்களின் வாழ்வாதாரம்,கல்வி  உள்ளிட்ட விடயங்கள் கட்டியெழுப்ப வேண்டும்

ஐனவரியில் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை சஜீத் பிரேமதாச நடத்தவுள்ளார்.

இதன் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் 30வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கையும் கட்டியெழுப்ப முடியும்  என உமாச்சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here