பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “வென்தேசிவத்த சுத்தா” என்பவர் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், களுத்துறை, வென்தேசிவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து மேலும் இரண்டு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் களுத்துறை, நாகொடை, பயாகலை மற்றும் வென்தேசிவத்த ஆகிய பிரதேசங்களில் பல்வேறு நபர்களிடம் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து அவர்களை அச்சுறுத்தித் தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பயாகலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here