கைதிகள் குழுவொன்று கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, நீர்கொழும்பு, தலுபொத, பல்லன்சேன திறந்த சிறைச்சாலை சுற்றுவட்டாரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், கலவர தடுப்புப் பிரிவினர் மற்றும் விமானப்படையினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதிகள் குழுவொன்று இன்று (07) காலை கூரையின் மீது போராட்டத்தை ஆரம்பித்ததை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமையின் பின்னர் அங்கிருந்த கைதிகள் குழுவொன்றை பல்லன்சேன திறந்த சிறை முகாமிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையில் நேற்று (06) இரவு புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அதில் ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.

அங்கு காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒரு கைதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இன்று (07) காலை குருவிட்ட சிறைச்சாலையிலும் அமைதியின்மை ஏற்பட்டது.

அதில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதிகள் குழுவொன்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கும் சேதம் விளைவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here