புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவு ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், 9 கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், முப்படையினர் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று ஏற்பட்ட நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக குறித்த அதிகாரிகளின் உதவியும் பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் இன்றைய தினம் சிறைச்சாலையில் உறவினர்களை சந்தித்தல் இடம்பெறாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here