இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்க தமது அரசாங்கம் முயலாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில், செய்தியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கு அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here