முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தற்போது மீள அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 1,200 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகளை மீள அழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.








