பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் பேச்சாளராக பிரிகேடியர் பிரேங்க்ளின் ஜோசப், நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்
கொண்டார்.
முன்னர் இந்தப் பதவியில் இருந்த கேர்ணல் நலின் ஹேரத் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பிராங்க்ளின் ஜோசப் அந்தப் பதவியில் கடமைகளைப் பொறுப்பேற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவப் பொறியியாளர் படையணியின் புகழ்பெற்ற அதிகாரியான பிரிகேடியர்
பிரேங்க்ளின் ஜோசப், தொழில்முறை, தலைமைத்துவம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்காக கூடிய
அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறார்.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக சிறந்த சேவைாற்றி வரும் இவர், ஊடக
பணிப்பாளராகபொறுப்பேற்பதற்கு முன்னர், இலங்கை பொறியியாளர் படையணியின் மையத்
தளபதியாக சிறப்பாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.








