இலங்கைக்கான பூட்டான் தூதுவர் டஷோ கர்மா ஹமு டோர்ஜி, இலங்கைக்கான கஜகஸ்தான் குடியரசின் தூதுவர் சேர்ஜி விக்டோரோவ், இலங்கைக்கான ஜோர்தான் தூதுவர் யூசெப் முஸ்தபா அப்தெல்கனி, இலங்கைக்கான எரித்திரியா நாட்டின் தூதுவர் அலம் வோல்டெமரியம், மற்றும் இலங்கைக்கான உஸ்பெகிஸ்தான் தூதுவர் அலிஷர் துக்தயேவ் ஆகியோருக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் சந்திப்புகள் இடம்பெற்றதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பானது பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடனான இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

பிரதமருடனான இந்த கலந்துரையாடலில் அனைத்து தூதுவர்களையும் வரவேற்ற பிரதமர், பரஸ்பர நலன்கள், நிர்வாகத்தில் ஒத்துழைப்பு, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்தி இந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

ஆடை உற்பத்தி, கல்வி, கலாச்சாரப் பரிமாற்றம், ஏற்றுமதி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சுற்றுலாத் துறை விரிவாக்கம் ஆகியவை இந்தக் கலந்துரையாடலின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் ருவினி முனதாச ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here