தென்னிலங்கை வேட்பாளர்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும் கூட, தென் இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு மாயை தோற்றம், மாயை அலையாக இங்கே உருவெடுத்து இருக்கின்ற நிலையில் அதன் பாதகங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அதற்காகத்தான் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த தேசிய அரசியலில் இதுவரை இல்லாதவாறு பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்து, பாராளுமன்றத்தில் தங்களுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான களங்களை திறப்பதற்கு ஆரம்பித்திருக்கின்றன.

அதனை வெளிப்படுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது. அதன் அடிப்படையிலும் நாங்கள் இந்த தேர்தலில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு என்ற ரீதியில் களம் இறங்கி உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here