உள்நாட்டு பால் உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 500 பால் விற்பனை நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதையும் புதிய பால் பொருட்களை அணுகுவதை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தொழில்முனைவோருடன் இணைந்து இந்த முயற்சி செயல்படுத்தப்படும் என்று மில்கோவின் தலைவர் ஜி.வி.எச். கோட்டாபய தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் பிராந்திய மேம்பாட்டு வங்கியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு, பங்கேற்கும் தொழில்முனைவோருக்கு நிதி மற்றும் ஏற்பாட்டு உதவிகளை பெற்றதருகிறது.

இந்த முயற்சி உள்நாட்டு பால் நுகர்வை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் புதிய வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here