பிரமிட்டுகளில் ஏற மனிதர்களுக்கு அனுமதியில்லை. மனிதனால் சுற்றிப் பார்க்க முடியாத பிரமிட்டின் உச்சியில் நாயொன்று ஏறி சுற்றி வரும் வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
பிரமிப்பை தரக்கூடியது பிரமிட்டுகள். கிஸா பிரமிட்டு 450 அடி உயரம் கொண்டது. சிறிய குன்று போல இருக்கும். எகிப்திலுள்ள 118 பிரமிட்டுகளில் இதுதான் பெரியது. பழைமையான பாரம்பரிய சின்னமான பிரமிட்டுகளில் ஏறுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் மனிதர்கள் பிரமிட்டின் உச்சியை பார்ப்பது அரிது. ஆனால், அதன் உச்சியில் ஒரு நாய் ஏறிச் சென்று சுற்றிக் கொண்டிருந்தமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பலூனில் பாராகிளைடிங் செய்த அலெக்ஸ் லெங்கால் என்பவர் திடீரென இந்தக் காட்சியை கண்டார். அவர் செல்பி எடுத்தபடி பயணித்தபோது இந்த காட்சியையும் வீடியோவாகப் பதிவு செய்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நேற்றுக் காலை 8 மணிக்கு வெளியிட்ட வீடியோ பிற்பகலுக்குள் சுமார் 5 இலட்சம் பேரால் ரசிக்கப்பட்டுள்ளது.







