பிரித்தானியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தம் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் வேகமாக தொடர்வதற்கு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு குறித்த இருவரும் இது தொடர்பில் தொலைபேசி ஊடாக உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவையேற்படின் அமெரிக்க வர்த்தக வரிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்க பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருப்பதாக அந்நாட்டு அரச தரப்புகள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் புதன்கிழமை முதல் அமுலாகவுள்ள பிரித்தானிய மகிழுந்து இறக்குமதிகள் மீதான அமெரிக்காவின் 25 சதவீத வரிவிதிப்புக்கு முன்னதாக, இறுதி நேரத்தில் வரிவிலக்கு பெறும்நோக்கில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

அமெரிக்காவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட விரும்பவில்லை என பிரித்தானிய பிரதமர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

எனினும், பிரித்தானியாவுக்கு விலக்கு அளிக்கும் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அமெரிக்கா மீது பரஸ்பர வரிகளை அறிமுகப்படுத்தும் உரிமையை கொண்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here