பொருட்கள் இறக்குமதி என்ற போர்வையில் சட்டவிரோதமாக டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 17 நிறுவனங்கள் மீது நிதி குற்ற புலனாய்வு பிரிவு FCID விரிவான விசாரணை ஆரம்பித்துள்ளது.
குறித்த 17 நிறுவனங்களும் 1-2 நபர்களால் இயக்கப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக இதே போன்ற மோசடியில் 72 நிறுவனங்களை இயக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023-2025 காலத்தில் மொத்தம் ரூ.190 பில்லியன் வெளிநாடுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு அவற்றைக் ரூ.130 பில்லியன் 72 நிறுவனங்களால் மாத்திரம் அனுப்பப்பட்டுள்ளன.
-கொழும்பில் உள்ள 6 வங்கிகள் மூலம் பணம் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பிரேசில், பனாமா, மொரீஷியஸ், மடகாஸ்கர் போன்ற பணமோசடி அதிக ஆபத்துள்ள (Red Flag) நாடுகளுக்கு பணம் சென்றுள்ளது, எனினும் எந்தவித பொருட்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த விசாரணைகளால் TT மூலம் பணம் அனுப்புவோர் எண்ணிக்கை 90% குறைந்துள்ளதாக நிதி குற்ற புலனாய்வு தெரிவித்துள்ளது.







