நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று (04) இரவு 10.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவிப்பு அமுலில் இருக்கும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கண்டி, கேகாலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எச்சரிக்கை நிலை 2 – (அவதானமாக இருக்கவும்)

கண்டி மாவட்டம்:- உடுதும்பர, மினிபே

கேகாலை மாவட்டம்: – தெஹியோவிட்ட

மாத்தளை மாவட்டம்: – அம்பன்கங்கை கோரளை, மாத்தளை

எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருக்கவும்

கேகாலை மாவட்டம்:- ரம்புக்கனை

மாத்தளை மாவட்டம்: – ரத்தொட்டை

இரத்தினபுரி மாவட்டம்: – எஹலியகொட ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here