புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் புரட்சிகர மே தின பேரணியும், பொதுக்கூட்டமும் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மே தின பேரணி யாழ். ஐந்து சந்தியில் இருந்து ஆரம்பமாகி யாழ் நகர் ஊடாக பயணித்து றிம்மர் மண்டபத்தை வந்தடைந்ததும் பொதுக்கூட்டம் ஆரம்பமானது.

பொருளாதார நெருக்கடிகளுக்கும், தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வலியுறுத்தி குறித்த மே தின பேரணியும், பொதுக் கூட்டமும் இடம்பெற்றது.

நிகழ்வில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சின் பொது செயலாளர் சி.கா.செந்திவேல், கட்சியின் வடபிராந்திய செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here