சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்து கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா.
தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இத் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களின் லிரிக்கள் வீடியோக்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








