இலங்கையின் நீர் மற்றும் சுகாதார திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 300 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க அனுமதி அளித்துள்ளது.

இதில் 200 மில்லியன் டொலர் காலநிலைக்கு ஏற்ற நிலையான நீர் வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேல் மற்றும் தென் மாகாணங்களில் 13 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான குடிநீர் வசதியை பெறுவார்கள்.

யாழ்ப்பாணத்தில் சுமார் 2.5 இலட்சம் மக்களுக்கு கழிவுநீர் மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்.

கொழும்பு மற்றும் லுணுகம்வெஹெரவில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குழாய் வலையமைப்புகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும். யாழ்ப்பாணத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

மீதமுள்ள 100 மில்லியன் டொலர் நீர் வழங்கல் மற்றும் சுகாதார சீர்திருத்த திட்டத்தின் 2வது கட்டத்திற்காக வழங்கப்படுகிறது. இது நீர் வளத்துறை நிர்வாகத்தை வலுப்படுத்தவும், சேவையை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டங்கள் மூலம் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் காலநிலைக்கு ஏற்ற நீர் வசதிகள் கிடைக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here