ஒரு பெண்ணின் நிர்வாண படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை வாட்ஸ்அப் மூலம் பரப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், ஆணைமடு பொலிஸ் பிரிவில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை (13) அன்று, அந்த பெண் அளித்த முறைப்பாட்டை அடுத்து, வாரியபொல கணினி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதுடையவர் என்றும், அவர் இம்புரிய பகுதியை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல கணினி குற்ற விசாரணை பிரிவு மேற்கொண்டு வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here