வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ், பொது மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் இலக்கம் கொண்ட விழிப்புணர்வு பிரசுரங்களை பேருந்துகளில் ஒட்டும் செயற்பாடு இன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பரிந்துரை அடிப்படையில், பொது போக்குவரத்து சேவையின் போது மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பில் முறையிடுவதற்கான வாய்ப்பு வழங்கும் நோக்கில், இந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு கிளிநொச்சி பேருந்து நிலைய பொறுப்பதிகாரி ஈஸ்வரதேவன் கோபிதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
மாவட்ட பதில் அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரனும் இதில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த விழிப்புணர்வு செயற்பாடு, எதிர்வரும் நாட்களில் வடமாகாணத்தின் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


(கிளிநொச்சி நிருபர்- ஆனந்தன்)








