பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்கோன தியலகொட பகுதியில்,நேற்றைய தினம்(அக்டோபர் 7) அதிகாலை மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருநாள் மீன்பிடிக்காக கடலுக்குச் சென்ற இரு மீனவர்கள் மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்டனர். அருகிலிருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் காயமடைந்தவர்களை கரைக்கு கொண்டு வந்து பேருவளை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
அவர்களில் ஒருவர், மக்கோன, கொடெல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மற்றொருவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் களுத்துறை நாகொட மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








