முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் – கொக்காவில் பகுதியில், ஒரு பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
592வது இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று காலை விசேட அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில் அவர் கைது செய்யப்பட்டு மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் இருந்து 92 கிராம் 400 மில்லிகிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரி முன்னதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொறுப்பதிகாரியாக பணியாற்றியிருந்தார். அவர் மீது போதைப்பொருள் கடத்தலில் உடந்தை, இலஞ்சம் பெறுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் வெலிஓயா பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
தற்போது அவர் மீது மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதோடு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
மக்கள், குறித்த பொலிஸ் அதிகாரி மீது உடனடி சட்டநடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.








