ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என தம்மை அரசாங்கம் பணித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி மறுத்துள்ளார்.
இந்த செய்திகள் முற்றிலும் பொய்யானவை என நிலந்தி கொட்டஹச்சி கூறினார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.
இதற்கு விளக்கமளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதேவேளை ஒரு சில ஊடகங்கள் பொறுப்புக்கூறலின்றி செய்திகளை வெளியிடுவதாகவும் சபையில் சுட்டிக்காட்டினார்.







