கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பொலிஸ் விளக்க அறிக்கை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்துவதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் அறிக்கை பிரிவு, சான்றிதழ்களை பரிசீலிப்பது, அறிக்கைகளை சேகரிப்பது மற்றும் அச்சிடுவதை கையாள்கிறது.
நேற்று (20) பிற்பகல் வேளையில் கணினி முறைமை செயலிழந்த நிலையில் செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனமான ICTA பிரிவிற்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கணினி முறைமையை மீண்டும் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கணினி முறைமை முழுமையாக சீர்செய்யப்படும் வரை பொதுமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன் விண்ணப்பதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை மீண்டும் சமர்ப்பிக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.








