14 லம்போர்கினி சொகுசு வாகனங்கள் கடல் வழியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதாகவும், அவை வான்வழியாக டுபாய் மற்றும் தோஹாவிற்கு அனுப்பும் நோக்கில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏழு 40 அடி கொள்கலன்களில் அடைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் நாளை 21 ஆம் திகதி விமான நிலையத்திலிருந்து எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கிற்கான பாரம்பரிய கப்பல் வழிகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், இலங்கை கடல்-விமான சரக்கு போக்குவரத்து மையமாக வளர்ந்து வருவதை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.
(படம்:AI)








