தென் பகுதி கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் நெடுநாள் மீன்பிடி படகு ஒன்றைக் கடற்படையினர் நடுக்கடலிலே வைத்துப் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்தப் படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

குறித்த படகில் போதைப்பொருள் கடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் அந்தப் படகு தற்போது கரைக்குக் கொண்டு வரப்படுவதாகக் கடற்படை தெரிவித்துள்ளனர்.

படகு கரைக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரே அதில் கொண்டு வரப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் அதன் பெறுமதி குறித்த முழுமையான விபரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here