மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு அலுவலக நடைமுறைகளும் முறைமைகளும் தொடர்பான முதலாவது பயிற்சி செயலமர்வு இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் மேற்பார்வையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (4/8/2025) இடம் பெற்றது.

இதன் போது ஏறாவூர் நகர் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ. ரஹீமினால் உத்தியோகத்தர்களுக்கு வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையை முகம் கொடுப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களும் விடய ஆய்வு மூலம் தெளிவூட்டல் வழங்கப்பட்டதுடன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிற்கு அலுவலக நடைமுறை தொடர்பாக காணப்பட்ட ஐய வினாக்களுக்கான தெளிவூட்டல்கள் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here