மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நிகரான சீன யுவான் மதிப்பிலான கடனை இலங்கை பெறவுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தொலைபேசி நேர்காணலில் இதனைத் தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் இந்த மாத இறுதியில் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. எனினும், திட்டத்தை முழுமையாக நிறைவு செய்ய மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் நிதி தேவைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
புதிய யுவான் கடன், 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி–இறக்குமதி வங்கியிடமிருந்து இலங்கை பெற்ற 989 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு மாற்றாக வழங்கப்பட உள்ளது.
இத்துடன், குறித்த திட்டத்துக்காக அரசாங்கமும் மேலதிக நிதியை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







